அரசு மேடையில் அமர வைத்து வாரிசு அரசியலுக்கு மகுடம் சூட்டுவதற்கு பட்டாபிஷேகம் செய்கிறீர்களே - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 19 ஜனவரி, 2025

அரசு மேடையில் அமர வைத்து வாரிசு அரசியலுக்கு மகுடம் சூட்டுவதற்கு பட்டாபிஷேகம் செய்கிறீர்களே


 அரசு மேடையில் அமர வைத்து வாரிசு அரசியலுக்கு மகுடம் சூட்டுவதற்கு பட்டாபிஷேகம் செய்கிறீர்களே தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் வருகிற சட்டமன்றத் தேர்தலில் புகட்டுவார்கள் - ஆர்.பி.உதயகுமார் பேச்சு.




மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி டி.குன்னத்தூர் அம்மா கோவிலில் மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், திருமங்கலம் சட்டமன்ற தொகுதி கழகத்தின் சார்பில் நடைபெற்ற புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 108வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர், சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், கழக மாணவரணி செயலாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். கழக பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், திருமங்கலம் சட்டமன்ற தொகுதி கழகத்தின் சார்பில் டி.குன்னத்தூர் அம்மா கோவிலில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 108வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் பிரமாண்டமாக நடைபெற்றது. முன்னதாக அம்மா திருக்கோவிலில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி திருவுருவ வெங்கல சிலைக்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


இக்கூட்டத்திற்கு டி.கல்லுப்பட்டி ஒன்றிய கழகச் செயலாளர் ராமசாமி தலைமை வகித்தார். 
மாவட்ட கழக அவைத்தலைவர் முருகன், பொருளாளர் வக்கீல் திருப்பதி, துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வம், மாவட்ட அம்மா பேரவைச் செயலாளளர் தமிழழகன், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனரணி செயலாளர் பேரையூர் ராமகிருஷ்ணன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் வக்கீல் பாஸ்கரன், பொதுக்குழு உறுப்பினர் பாவடியான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கழகச் செயலாளர்கள் அன்பழகன், ராமையா, கண்ணன், பிரபுசங்கர்
ஆகியோர் வரவேற்றனர்.
பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார், கழக மாணவரணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் ஆகியோர் சிறப்பாளர்களாக கலந்து கொண்டு எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாவில் சிறப்புரையாற்றினார்கள்.
அப்போது முன்னாள் அமைச்சர், சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில்


ஜல்லிக்கட்டு போட்டியை ஊர் கமிட்டி தான் நடத்துவார்கள் அதற்கு அரசு உறுதுணையாக இருக்கும் உள்ளூர் மக்கள் கௌரவிக்கப்பட வேண்டும் மண்ணின் மைந்தர்கள் கௌரவிக்கப்பட வேண்டும். அதுதான் மரபு அப்படித்தான் கடைப்பிடிக்கப்பட்டது ஆனால் இப்போது ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு வானத்திலிருந்து பொத்துக் கொண்டு பிறந்தவர்கள் போல ஐயா அமைச்சர் மூர்த்தி அவர்களே நீங்களும் பத்து மாசம் தான் நாங்களும் பத்து மாசம் தான் எல்லோரும் தாய் வயிற்றில் பத்து மாசம் தான் நீங்கள் ஏன் ஜல்லிக்கட்டை மல்லுக்கட்டாக நடத்துகிறீர்கள் அமைச்சரின் மரபு கடைபிடிக்க வேண்டும் அரசியல் அமைப்புச் சட்டத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என உறுதிமொழி ஏற்று உள்ளீர்கள் உறுதி மொழியை காற்றில் பறக்க விட்டு விட்டு நீங்கள் எஜமானருக்கு சேவை செய்வதற்காக அமைச்சருக்குரிய மரபை  சுயநலத்திற்காக காற்றிலே பறக்க விடுவது தவறான முன் உதாரணம் நீங்கள் மக்களை ஏமாற்றுகிற நாடகம் உள்ளூர் மக்கள் முதல் முதலாக உரிமை பறிக்கப்பட்ட போது ஜல்லிக்கட்டு தடை செய்த போது தன் எழுச்சியாக ஒவ்வொரு வாடிவாசல் முன்பாக இளைஞர்கள் தாய்மார்கள் களத்தில் நின்று போராடி உரிமையை அதிமுக அரசு பெற்று கொடுத்ததோ அதேபோல இன்றைக்கு அதே உரிமை பறிக்கப்படும் போது வாடி வாசலில் உட்கார்ந்து போராடியபோது அமைச்சர் கைகட்டி வாய் பொத்தி நின்றாரே மூர்த்தி அவர்களிடம் சொல்கிறேன் மீண்டும் அதிமுக அரசு புரட்சித் தமிழர் எடப்பாடியார் தலைமையில் அமையும் அப்போது உள்ளூர் கமிட்டியார் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவார்கள் அதில் ஜாதி கிடையாது மதம் கிடையாது வீரர்களுக்குத்தான் முன்னுரிமை சமதர்மமாக நடத்தப்படும் என்பதை அம்மாவின் திருக்கோவிலில் அம்மா பாதம் தொட்டு ஜல்லிக்கட்டு மல்லுக்கட்டுக்கு தீர்வு காண்பதற்கு ஒரே தலைவர் புரட்சித்தமிழர் முதலமைச்சராக வேண்டும்.


அரசு விழாவாக மேடையில் அனைத்து அமைச்சர்களும் மாவட்ட ஆட்சியர் உதயநிதி ஸ்டாலின் எல்லோரும் நிற்கிறார்கள் ஆனால் தவ புதல்வன் உட்கார்ந்து உள்ளார் இதை எப்படி எடுத்துக் கொள்வது இவர்கள் நடத்துகிற கூத்தையும் குமாலத்தையும் நிச்சயமாக தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் வருகிற சட்டமன்ற தேர்தலில் புகட்டுவார்கள் ஆணவம் அகம்பாவம் மீனாட்சி குடி கொண்டிருக்கிற மதுரையிலே மண்ணை கவி இருக்கிற அவருடைய பெரிய அப்பா அழகிரியை கேட்டால் தெரியும் இந்த மதுரை மண் நெற்றிக்கண்ணை திறந்தால் குற்றம் குற்றமே கடவுளை குற்றம் செய்தாலும் குற்றம் குற்றமே என்று சொல்கிற மண்ணில் நீங்கள் ஆட்டத்தை ஆரம்பித்து உள்ளீர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


Mini Popup Ad