இராமநாதபுரம் காவல்துறையின் கடுமையான நடவடிக்கையின் காரணமாக உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி திருக்கோயில் ஆருத்ரா தரிசனம் செய்யமுடியாமல் பொதுமக்கள் தவிப்பு
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் திரு உத்திரகோசமங்கை ஸ்ரீ மங்களநாத சுவாமி கோயில் ஆருத்ரா தரிசனம் விழா கடந்த 13 ந்தேதி நடைபெற்றது அப்போது போது இராமநாதபுரம் மாவட்ட காவல் துறையின் கட்டுப்பாட்டில் இவ்விழா ஆண்டு தோறும் நடைபெறும் அது போல் இந்த ஆண்டும் நடைபெற்றது இவ்விழாவில் காவல்துறையினர் மிகவும் கண்டிப்போடு பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளை நடத்தியதாகவும் இதனால் பொதுமக்கள் தரிசனம் செய்ய முடியாமல் தவித்தனர். ஊரக வளர்ச்சித் துறையை சார்ந்த இணை இயக்குநர் உதவி இயக்குநர் க்கு அனுமதி மறுப்பட்டதாகவும் இதனால் இவர்களுக்கும் காவல்துறையினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், காவல்துறையினர் தங்களுடைய குடும்பத்தினரை மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டதாகவும் அதிகாரிகளையும் பொதுமக்களை அனுமதிக்கப்படாமல் மிகவும் சிரமப்படுத்தியதாக கூறப்படுகிறது இதனால் இந்த ஆண்டு ராமநாதபுரம் தேவஸ்தானத்திற்கு சொந்தமான மங்களநாதசுவாமி திருக்கோயில் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது இந்த ஆண்டு ஊரக வளர்ச்சி துறை சார்பாக 30 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் மற்றும் சாலை வசதிகள் மராமத்து பணிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அரசு அலுவலர்களையும் கோயிலுக்குள் நுழைய விடாமல் போலீசார் தடுத்ததால் அலுவலர்கள் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால் தரிசனம் செய்யமுடியாமல் திரும்பியதாகவும் இராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்நமான கோயிலின் வருமானம் இந்த ஆண்டு குறைந்து உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக