திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வாத்திமனை பகுதியை சேர்ந்த ரஹீபூர் ரஹ்மான் இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பெங்களூர் சென்றிருந்த நிலையில், அதனை அறிந்த மர்மநபர்கள் கடந்த 12.01.2025 தேதி ரஹீபூர் ரஹ்மானின் வீட்டின் பூட்டை உடைத்து, 25 சவரன் தங்கநகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.
இதுகுறித்து ரஹீபூர் ரஹ்மான் ஆம்பூர் நகர காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், இக்கொள்ளைச்சம்பவம் குறித்து, காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வந்த நிலையில், இக்கொள்ளைச்சம்பவம் தொடர்பாக சென்னை கண்ணகி நகரில் பதுங்கி இருந்த அப்துல்கலாம் மற்றும் மூர் மார்க்கெட்டை சேர்ந்த தினேஷ், தாஸ்குமார், ஆகியோரை ஆம்பூர் நகர காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடம் இருந்து தங்கநகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்து, 3 பேர் மீதும் வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர்
பு.லோகேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக