குடியரசு தினவிழா கொண்டாட்டம். ஒன்றிய திமுக செயலாளர் செங்குழி ரமேஷ், நிர்வாகிகள் பங்கேற்பு.
நாட்டின் 76வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் தேசிய கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன.
மாணவ,மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடந்தது. தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி திருச்செந்தூர் சட்டமன்ற அலுவலக முன் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.
இதில் திருச்செந்தூர் ஒன்றிய திமுக செயலாளர் செங்குழி ஏபி ரமேஷ் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். விழாவில் நகர திமுக செயலாளர் வாள் ஆர். சுடலை, நகரமன்ற உறுப்பினர் செந்தில்குமார்,
நிர்வாகிகள் சந்திரசேகர், செந்தில் அதிபன், சுதாகர், தோப்பூர் சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட அனைவரும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
தமிழக குரல் செய்திகளுக்காக அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக