நாட்டின் 76வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. அரசு அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன.
திருச்செந்தூர் நகராட்சி அலுவலகத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் காந்தி மற்றும் காமராஜர் சிலைகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து நகராட்சி வளாகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் உள்ள தேசியக்கொடியை நகர் மன்ற தலைவர் சிவஆனந்தி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி துணை தலைவர் செங்குழி , கவுன்சிலர்கள் அந்தோணி ரூபன், செந்தில்குமார், சோமசுந்தரி, கிருஷ்ணவேணி, லீலா, முத்து ஜெயந்தி, லிங்கசெல்வி,
திருச்செந்தூர் நகர திமுக செயலாளர் வாள் ஆர். சுடலை, நிர்வாகிகள் சந்திரசேகர், சுதாகர், செந்தில்அதிபன் மற்றும் நகராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக