இடைநிலை ஆசிரியர் சங்க துணைத்தலைவரின் மகன் இ.பிரபாகரராஜ் சாலை விபத்தில் மரணம் அனைத்துவகை ஆசிரியர் சங்க நிர்வாகிகள் நேரில் அஞ்சலி
காட்பாடி ,ஜன 15 -
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம், சேர்க்காடு அரசு மேல்நிலைப்பள்ளியின் இடைநிலை ஆசிரியர் மற்றும் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர், இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் இணை அமைப்பாளர் பெ.இளங்கோ அவர்களின் இளைய மகள் இ.பிரபாகரராஜ் (வயது 19) பி.டெக் இரண்டாம் ஆண்டு படித்து வரும் இவர் பொங்கல் பண்டிகையை கொண்டாட திருவலத்திலிருந்து தனது நண்பர் அஸ்வினுடன் காரில் 14ஆம் தேதி காலை சென்னை நோக்கி புறப்பட்டார் வழியில் இராணிப்பேட்டை மாவட்ட பெல் நிறுவனம் அருகில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்சி சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். உயிருக்கு ஆப்பதான நிலையில் அஸ்வின் இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.மறைந்த இ.பிரபாகரராஜ்(வயது19) அன்னாரின் உடலுக்கு வேலூர் மாவட்ட அனைத்து வகை ஆசிரியர் சங்கங்களில் கூட்டமைப்பின் இடைநிலை ஆசிரியர் முதல் மேல்நிலைப்பள்ளி தலைமை யாசிரியர் வரை உள்ள 24 இயக்கங்களை சார்ந்த ஆசிரியர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செ.நா.ஜனார்த்தனன், ஆ.ஜோசப் அன்னையா, முகமது ஷாநவாஸ், ஆகியோர் தலைமையில். இணை ஒருங்கிணைப்பாளர்கள் எம்.எஸ்.
செல்வகுமார், க.குணசேகரன், கே.எம்.ஜோதீஸ்வரபிள்ளை, எஸ்.எஸ்.சிவவடிவு, கே.சங்கர், எல்.குமணன், ஜி.சீனிவாசன், ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அன்னாரின் மறைந்த மாணவரின் தந்தை பெ.இளங்கோ, தாய் டில்லிராணி மூத்த சகோதரர் ஷருண் குமார் ஆகியோருக்கும் குடும்பத் தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக