தை அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மகாலிங்கம் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 30 ஜனவரி, 2025

தை அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மகாலிங்கம் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

தை அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மகாலிங்கம் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

இந்த ஆண்டு தை அமாவாசை வழிபாட்டிற்கு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு ஜனவரி 27 முதல் 30-ம் தேதி வரை பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

 பக்தர்கள் வசதிக்காக மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சதுரகிரி மலை அடிவாரமான வத்திராயிருப்பு தாணிப்பாறைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. 

நள்ளிரவு முதலே தாணிப்பாறை அடிவாரத்தில் உள்ள வனத்துறை நுழைவாயில் முன் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பனி மூட்டம் காரணமாக காலை 6 மணிக்கு மேல் வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர்.

சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களில் அமாவாசையை முன்னிட்டு சுவாமிக்கு 18 வகையான அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

திருநெல்வேலிமாவட்ட செய்தியாளர் தங்கராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad