L&T நிறுவனம் சார்பில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கோரம்பள்ளம், தூத்துக்குடியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 30 ஜனவரி, 2025

L&T நிறுவனம் சார்பில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கோரம்பள்ளம், தூத்துக்குடியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

L&T நிறுவனம் சார்பில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கோரம்பள்ளம், தூத்துக்குடியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது - என மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், தகவல்.

L&T நிறுவனம் சார்பில் சென்னைக்கு அருகில் திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் கப்பல் கட்டுமானப்பணி வேலைக்கு ஆள்சேர்க்கை நடைபெறுகிறது. 

எனவே ஐடிஐ முடித்த பிட்டர், வெல்டர், எலெக்ட்ரீசியன், வயர்மேன் பிரிவை சேர்ந்த மாணவர்கள் மற்றும் பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கோரம்பள்ளம், தூத்துக்குடியில் 10.02.2025 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 

L&T Ship Building Limited நிறுவனமானது தொழிற்பயிற்சி நிலையங்களில் வெல்டர், பிட்டர், எலெக்ட்ரீசியன் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு Structural Welding, Structural Fitting, Electrical Work Grinding and Scaffolding போன்ற பயிற்சிகளை வழங்கி வேலைவாய்ப்பு வழங்க உள்ளனர். எனவே, பயிற்சியிலுள்ள மற்றும் பயிற்சி முடித்த பயிற்சியாளர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

மேலும் இது தொடர்பான விவரங்களை அறிய கோரம்பள்ளத்திலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்திலுள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரிலோ அல்லது 0461-2340041 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad