சென்னை வீட்டு வசதி வாரிய செயலாளராக பதவி உயர்வில் செல்லும் வேலூர் சப்-கலெக்டர் ஆர்.பாலசுப்பிர மணியன் அவர்களுக்கு காட்பாடி ரெட்கிராஸ் பாராட்டு!
வேலூர் , ஜன 13 -
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்ட ரெட் கிராஸ் சங்கத்தின் பதவி வழி தலைவரும் வேலூர் வருவாய் கோட்டாட்சியருமான இரா பாலசுப்பிரமணியம் அவர்கள் பதவி உயர்வு பெற்று சென்னை வீட்டு வசதி வாரியத்தின் செயலராக மாவட்ட வருவாய் அலுவலராக செல்கிறார்கள் அவர்களுக்கு வழி வழியனுப்பும் நிகழ்வும் வேலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் (RDO office) நடைபெற்றது.
காட்பாடி வட்ட ரெட்கிராஸ் சங்கத்தின் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன், தலைமையில் அவை துணைத் தலைவர்கள் ஆர்.சீனிவாசன், ஆர்.விஜயகுமாரி, செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு பொருளாளர் வி.பழனி, மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் டாகட்ர் வீ.தீனபந்து, எஸ்.ரமேஷ்குமார்ஜெயின், பி.என்.ராமச்சந்திரன், ஆர்.ராதா கிருஷ்ணனன் ஆகியோர் சால்வை அணிவித்து கேடையம் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர்.
அப்போது பேசிய அவர் காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்தின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. தொடர்ந்து சிறப்பாக செயல்பட வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார். முனைவர். செ.நா.ஜனார்த்தனன், அவைத்தலைவர் தெரிவித்தார்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக