வேலூர்: கிராமங்களில் எருது விடும் திருவிழா நடத்த அனுமதி
வேலூர் ,ஜன 12 -
வேலூர் மாவட்டம் பொங்கல் பண்டிகையையொட்டி எருது விடும் திருவிழா நடத்தப்படும். மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் இந்த விழா ஆரவாரமாக நடைபெறும். சீறிப்பாய்ந்து ஓடும் காளைகளை இளைஞர்கள் இருபுறமும் நின்று கைகளால் தட்டி உற்சாகப்படுத்துவார்கள். விழா நடைபெறும் கிராமமே இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டத்தால நிரம்பி வழியும்.அதன்படி, இந்த ஆண்டு எருது விடும் திருவிழா நடத்த அனுமதி பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. அதன்பேரில் பல்வேறு கிராமத்தைச் சேர்ந்த விழாக்குழுவினர் திருவிழாவிற்கு விண்ணப்பித்தனர். அவர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு முதல் கட்டமாக 17 கிராமங்களில் எருது விடும் திருவிழா நடத்த அனுமதி வழங்கப் பட்டுள்ளது. இதற்கான அரசாணை பெற மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி, மார்ச் மாதங்களில் விழா நடத்துவதற்கு பல கிராமத்தினர் விண்ணப்பித்து வருவதாகவும், விண்ணப்பிக்கும்போது உரிய ஆவணங்களை இணைக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக