இராமநாதபுரம் பதவி உயர்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர்களுக்கு பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.
இராமநாதபுரம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காவலர்கள் பதவி உயர்வு பெற்ற 20 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு ஒன்பது வார கால பயிற்சி நிறைவு பெற்றது.
தமிழகத்தில் காவல்துறையில் சிறப்பு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர்களில் பனி மூப்பு அடிப்படையில் பலர் சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றுள்ளனர் இவ்வாறு சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றவர்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது இதன்படி இராமநாதபுரம் மாவட்டத்தில் 14 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களும் சிவகங்கை மாவட்டத்தில் 6 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களும் மொத்தம் 20 பேர்கள் சப் இன்ஸ்பெக்டராக பதவி உயர் பெற்றுள்ளனர் இவர்களுக்கு ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பணியிடை பயிற்சி முகாமில் கடந்த 9 வாரங்களாக அடிப்படை பயிற்சியும் காவரத்து பயிற்சியும் அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி முகாமில் காவல்துறை உயர் அதிகாரிகளும், சட்டம் சார்ந்த நிபுணர்களும் கலந்து கொண்டு பல்வேறு பயிற்சிகள் அளித்தனர்.இந்த பயிற்சியின் நிறைவு விழா நடைபெற்றது இதில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் கலந்து கொண்டு பயிற்சி முடித்தவர்களுக்கு வாழ்த்துக் கூறி போலீஸ் நிலையங்களில் எவ்வாறு பணிகள் மேற்கொள்வது என்பது குறித்து விளக்கம் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஆக பதவி ஏற்பவர்கள் தொடர்ந்து மூன்று மாத காலங்களில் போலீஸ் நிலையங்களை செயல்முறை பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும். அனைவருக்கும் விரைவில் போலீஸ் நிலையங்களில் சப் இன்ஸ்பெக்டர் பணிகளுக்காகன பணியிடங்கள் ஒதுக்கப்படும் என தெரிகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக