நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 25 ஜனவரி, 2025

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி.

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி.

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. தலைமையாசிரியர் குனசீலராஜ் ரிப்பன் வெட்டி கண்காட்சியை துவக்கி வைத்தார். 

உதவி தலைமையாசிரியர் சார்லஸ் திரவியம் முன்னிலை வகித்தார். பசுமை சார்ந்த அறிவியல் உபகரணங்களை விளக்கும் வகையில் கண்காட்சி நடத்தப்பட்டது. மாணவர்கள், பல்வேறு அறிவியல் செயல் திட்டங்களை காட்சிப்படுத்தினர். 

குறிப்பாக, நீர் மற்றும் காற்றின் அழுத்தத்தில் இயங்கும் கருவிகள், நில நடுக்கத்தினை உணர்ந்து உடனடியாக ஒலி எழுப்பும் கருவி, இயற்கை முறையில் நீர் சுத்திகரிக்கும் கருவிகள், போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கண்காட்சியை பார்வையிட்டனர். 

தாங்கள் காட்சிப்படுத்திய உபகரணங்களின் செயல்பாடுகளை, மாணவர்கள் மற்ற மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் விளக்கிக் கூறினர். ஆசிரியர்கள் ஜெர்சோம் ஜெபராஜ்,  ஜென்னிங்ஸ் காமராஜ், ஜெயந்தி சுபாஷினி, சோபியா பொன்ஸ், ஐசக் சந்தோஸ் பிரபு, உடற்கல்வி ஆசிரியர் தனபால், என்சிசி அலுவலர் சுஜித் செல்வசுந்தர், ஓவியக்கலை ஆசிரியர் அலெக்சன் கிறிஸ்டோபர், ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad