வேலூர் மாவட்டம் குடியாத்தம் கொண்ட சமுத்திரம் ஊராட்சி கல்லேரி கிராமத்தில் ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததியர் மக்களுக்குல் அரசு வழங்கிய பட்டா நிலத்தை அளந்து பாதை அமைத்து தரவும் அரசு நிலத்தை சுற்றி கம்பி வேலி அமைத்து கல்குவாரிக்கு பள்ளம் தோண்டிய ஸ்ரீ ராமு மற்றும் முனியன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டிய படியும் புலன் என் 30/1 30/2 42/2 31/2 ல் சுமார் 230 நபர்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது அந்த இடத்தை அளவீடு செய்து தரக் கோரி இன்று காலை குடியாத்தம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் வெங்கடேசன் என்பவரிடம் இந்திய குடியரசு கட்சி மாவட்டத் தலைவர் இரா சி தலித் குமார் தலைமையில் பொதுமக்கள் இன்று காலை மனு அளித்தனர் மனுவைப் பெற்றுக் கொண்ட வட்டாட்சியர் துரித நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக