சுதந்திர போராட்டத்திற்காக வீரமுழக்கமிட்ட நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 128 வது ஆண்டு பிறந்தநாள் நிகழ்வு இன்று முழுவதும் அதிமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டம் வண்ணாரப்பேட்டையில் உள்ள அறிமுக நெல்லை மாநகர் மாவட்ட அலுவலகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் அலங்கரிக்கப்பட்ட திரு உருவ படத்திற்கு அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜா தலைமையில் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் மலர் தூவி மரியாதை செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் கல்லூர் வேலாயுதம், மாவட்ட பொருளாளர் ஜெயபாலன், மாநில சிறுபான்மையினர் பிரிவு துணைச் செயலாளர் மகபூப்ஜான், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டி, ஐடி வின் மாவட்ட செயலாளர் சம்சுல்தான், விவசாய அணி மாவட்ட செயலாளர் காளி முருகன், மானுர் ஒன்றிய செயலாளர் துறையூர் சேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக