பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன், ஸ்டாலின் ஆட்சியில், நடைபெறும் கொலை சம்பவங்கள், கொள்ளை சம்பவங்கள், பாலியல் சம்பவங்கள் என அனைத்திலும் திமுகவினர் தான் ஈடுபடுவதாகவும், கடந்த மூன்று ஆண்டு ஆட்சி காலத்தில், சட்ட ஒழுங்கு சீர்கெட்டு, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழக மாறிவிட்டதாக குற்றம் சாட்டினார்.
மேலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனம், திமுக அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் கட்டுப்பாட்டில் உள்ளதாக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை கூறுவது வெட்கக்கேடான செயல் எனவும், பாராளுமன்ற தேர்தலின் போது, நெய்வேலிக்கு வருகை தந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கொடுத்த பத்து வாக்குறுதி என்ன ஆனது என்று கேள்வி எழுப்பினார். எதிர்க்கட்சியாக இருக்கும்போது, ஏக்கர் ஒன்றுக்கு ஒரு கோடி கொடுக்க வேண்டும் என்று கூறிய, தற்போதைய ஸ்டாலின் அரசின் வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், ஆட்சிக்கு வந்த பின்பு விவசாயிகளையும், விவசாய தொழிலாளர்களையும் வஞ்சிக்கும் வகையில் செயல்படுவது கண்டிக்கத்தக்கது என குற்றம் சாட்டினார். இந்நிகழ்வில் புவனகிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாவட்ட மாநில ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக