நெய்வேலியில் என்எல்சி சுரங்கம் 1 ஏ விரிவாக்கத்திற்கு என்எல்சி நிர்வாகம் நிலம் கையகப்படுத்த உள்ளனர் இதற்கு வானதிராயபுரம் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்ட த்தில் உள்ளனர். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 23 ஜனவரி, 2025

நெய்வேலியில் என்எல்சி சுரங்கம் 1 ஏ விரிவாக்கத்திற்கு என்எல்சி நிர்வாகம் நிலம் கையகப்படுத்த உள்ளனர் இதற்கு வானதிராயபுரம் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்ட த்தில் உள்ளனர்.


கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம் உள்ளது இங்கே சுரங்கம் ஒன்று, சுரங்கம் ஒன்று விரிவாக்கம், சுரங்கம் இரண்டு என மூன்று திறந்தவெளி சுரங்கம் மூலம் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு மின் உற்பத்தி செய்து வருகின்றனர்.


என்.எல்.சி.இந்தியா நிறுவனம் நெய்வேலி அடுத்த வாணதிராயபுரம் பகுதியை நில கையக படுத்த முடிவெடுத்து அறிவிப்பு செய்யபட்டுள்ளது. இதனை தொடர்ந்து இப்பகுதி மக்கள் தங்களுக்கு உரிய இழப்பீடான வீட்டில் ஒருவருக்கு நிறந்தர வேலை மற்றும் ஏக்கர் ஒன்றுக்கு ஒரு கோடி இழப்பீடு வழங்க வேண்டும்.


மேலும் எங்கள் பகுதியில் உள்ள வீட்டு நில பகுதிகளை விற்க்க முடியாமல் இருபது ஆண்டு காலமாக முடக்கி வைத்தது கைவிட வேண்டும் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad