காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை மலைக்கோயில் தூய லூர்து அன்னை திருத்தலத்தில் 144வது ஆண்டு பெருவிழா கோலாகலம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2025

காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை மலைக்கோயில் தூய லூர்து அன்னை திருத்தலத்தில் 144வது ஆண்டு பெருவிழா கோலாகலம்!


வேலூர்,பிப்.16-
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கிறிஸ்டியான் பேட்டை மலைக்கோயில் தூய லூர்து அன்னை திருத்தலத்தில் 144வது ஆண்டு பெருவிழா கோலா கலமாக நடந்தது. இதற்காக கடந்த 8ம் தேதி மாலை 4:30 மணி அளவில் கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் விழா நடந்து வருகிறது. இந்நிலையில் காலை 9 மணிக்கு ஜெபமாலை மற்றும் 10 மணிக்கு திருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வேலூர் மறைமாவட்ட ஆயர் முனைவர் அம்புரோஸ் பிச்சைமுத்து  தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் அருட்கன்னி யர்கள் மற்றும் இறை மக்கள் சிறப்பித் தனர். இதைத்தொடர்ந்து மதியம் 12:30 மணிக்கு அன்பின் விருந்து நடந்தது. இதை தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு திருப்பலி தொடர்ந்து அன்னையின் தேர்பவனியும் நடைபெற்றது. ஆயர் அம்புரோஸ் பிச்சைமுத்து பங்கு மக்களுக்கு ஆசீர்வாதம் அளித்தார். இந்த பெருவிழாவுக்கான ஏற்பாடுகளை மெட்டுக்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், தொழிலதிபருமான நம்பிக்கை ராஜ் மற்றும் கண்ணன் ஆகியோர் செய்து இருந்தனர். இதை தொடர்ந்து அனைவருக்கும் மதிய உணவு விருந்து அளிக்கப்பட்டது.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad