வேலூர்,பிப்.16-
வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகர, ஒன்றிய பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மூன்று நம்பர் லாட்டரி ஆன்லைன் மூலமாக ஜி. ஆர். எம். குமரன் தலைமையில் அமோகமாக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல காட்டன் சூதாட்டம் தலைவிரித்து ஆடுகிறது. இந்த காட்டன் சூதாட்டம் மற்றும் மூன்று நம்பர் லாட்டரி அமோகமாக விற்பனை செய்யப் படுகிறது. இதற்கு இந்த ஜி. ஆர். எம். குமரன் என்பவருக்கு உறுதுணையாக பெருமாள் திருமுருகன் திருமண மண்டபம் மற்றும் அதன் எதிர்வீட்டில் பிச்சனூர் தினகரன், ஜெயராமன், புவனேஸ்வரி பேட்டை தாமு, ஜி .எச். பின்புறம் ஹோட்டல் கடை சத்யா மெஸ், ஹோட்டல் தெரு, பாபு, ராஜேந்திர சிங் தெரு பாபுராவ் தெரு ரவி கோபாலபுரம் தரணி, புவனேஸ்வரி பேட்டை, குமார், டீக்கடை கஸ்பா விநாயகர் கோவில் அருகில் மற்றும் முத்துசாமி குழு கே. எம். ஜி .எதிர் வீடு பார் ரமேஷ், முத்துசாமி ஆட்களான கே .எம். ஜி .வீடு, பார் ரமேஷ், முத்துசாமி பினாமி மனோகரன், தண்டபாணி, கார்த்தி, டாஸ்மாக் பார் அருகில் பவர் பிரகாசம், சிவராஜ் , சந்திரன், செந்தில் மஸ்தான் பி .ஆர். மணி ,கொண்ட சமுத்திரம் ஆகியோர் இந்த விற்பனையில் தொடர்ந்து ஈடுபடுவதாக தகவல்கள் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களால் புகாராக கூறப்படுகிறது .இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுத்து இரும்புக்கரம் கொண்டு இந்த காட்டன் சூதாட்டம் மற்றும் 3ம் நம்பர் லாட்டரி ஆகியவற்றை அடியோடு தடை செய்வார்களா என ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இதற்கு உறுதுணையாக இருப்பவர் தற்போது நிபந்தனை ஜாமினில் கையெழுத்திடும் பிச்சனூர் பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவர் இதற்கு தலைமையாக விளங்குகிறார் இவர் தலைமையில் தான் இது போன்ற விரும்பத் தழகாத செயல்கள் ஆங்காங்கே நடைபெறுவதாக கூறப்படுகிறது செந்தில் மற்றும் இருவது தம்பி குடியாத்தம் ரயில்வே மேம்பாலம் கீழ் பகுதியில் அதேபோன்று நேதாஜி சவுக் மற்றும் பிச்சனூர் பகுதியிலும் ஆங்காங்கே கடைகளை அமைத்து வியாபாரத்தை படு பிஸியாக நடத்தி வருகின்றனர் கேட்டால் நாங்கள் லுங்கி வியாபாரம் செய்கிறோம் நாங்கள் இப்பொழுது எல்லாம் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபடவில்லை என்று அடித்து போய் சொல்கின்றனர் இந்த ஜகஜால கில்லாடி செந்தில் என்று சொன்னால் அது மிகையாகாது இவ்வாறு இந்த கும்பல் இப்படியாக காட்டன் சூதாட்டத்தை ஆங்காங்கே நடத்திக் கொண்டுதான் இருக்கிறது இதை கண்டும் காணாமல் இருக்க போலீசருக்கு ரூபாய் ஒன்றரை லட்சம் வரை மாமுல் தரப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது காவல் நிலையங் களுக்கு மட்டுமின்றி குடியாத்தம் டிஎஸ்பி ராமச்சந்திரன் ஒரு கணிசமான தொகையை வாங்கிக் கொண்டு அவரும் கண்டும் காணாதது போல விட்டுவிட்டார் என்றே சொல்லலாம். இப்படி காட்டன் சூதாட்டம் டீக்கடைகள் ஆங்காங்கே காலியாக உள்ள கடைகள் போன்ற வற்றில் ஜருவராக நடந்து வருகிறது இவை அனைத்தும் தெரிந்திருந்தும் குடியாத்தம் நகர் மற்றும் தாலுகா காவல் நிலையங்களில் பணியாற்றும் தனிப் பிரிவு போலீஸ் சார் கண்டம் காணாமல் இருந்து கொண்டு அந்த சமூக விரோத கும்பலாகிய காட்டன் சூதாட்டம் நடத்தும் புல்லுருவிகளிடம் கணிசமாக ஒரு தொகையை பெற்றுக் கொண்டு அமைதி காத்து வருகின்றனர் இதற்காகவா தனிப்பிரிவு போலீசார் நியமிக்கப் பட்டுள்ளனர் என்பது வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தான் பதில் சொல்ல வேண்டும். இப்படி களைகளை உருவாக்க காரணமாக இருப்பது காவல்துறை தான் என்பது வெட்ட வெளிச்சமாக தெரியவந்துள்ள.து என்னதான் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் கரடியாக கத்தினாலும் இங்கு எதையும் அலட்டிக் கொள்ளாமல் சிறப்பாக மாமூல் ஒன்றையே வேத மந்திரமாக தாரக மந்திரமாக கொண்டு செயல்படுகின்றனர் தனிப்பிரிவு போலீசார் முதல் காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் முதல் காவல்துறை அதிகாரிகள் வரை என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை. இவ்வாறு வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது குடியாத்தம் பகுதியில் என்பது இங்கே கோடிட்டு காட்ட கடமைப்பட்டுள்ளோம். செந்தில் போன்ற விஷக்கிருமிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து உள்ளே வைத்தால் ஒழிய இந்த காட்டன் சூதாட்டம் களை கட்டுவது நிறுத்தப் படாது. ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் கூலி தொழிலாளர்களை குறி வைத்து அவர்களது ரத்தத்தை ஸ்ட்ரா போட்டு உறிஞ்சி குடிக்கின்றது ஒரு கும்பல் என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை. மக்களுக்காக காவல்துறையா?அல்லது காவல் துறைக்காக மக்களா? என்பதை காவல்துறை தலைவர் சங்கர் ஜூவால் தான் தெளிவுபடுத்த வேண்டும். காவல்துறை இனியும் தாமதிக்காமல் நடவடிக்கையை எடுக்குமா அல்லது நடவடிக்கை எடுக்காமல் கை கட்டி வேடிக்கை பார்க்குமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக