குடியாத்தம் ,பிப் 16 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா கால முதல் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் திருநங்கைகள் விதவைகள் பார்வை யற்றவர்கள் என்று மாதந்தோறும் 100 நபர்களுக்கு அரிசி பருப்பு, ரவை சேமியா மஞ்சத்தூள் போர்வைகள் புடவைகள் என்று தொடர்ந்து வழங்கி வந்தோம்
இன்று நூறு நபர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடுப்பேட்டையில் உள்ள எஸ் டி எஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது
நிகழ்ச்சிக்கு கேவி ராஜேந்திரன் தமிழக குரல் செய்தியாளர் தலைமை தாங்கினார் இதில் சிறப்புவிருந்தினர் களாக அரசினர் நெல்லூர் பேட்டை மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் விநாயகம் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் ஈ நித்யானந்தம்
முன்னாள் நகர் மன்ற உறுப்பினரும் வீட்டு வசதி கூட்டுறவு கடன் சங்கம் தலைவர் வி.இ கருணா முன்னாள் நகர் மன்ற துணைத் தலைவர் எஸ் டி மோகன் ராஜ் ஆகியோர் கலந்த கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள் இந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் திருநங்கைகள் ஏழைகள் என்று 100 நபர்கள் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை பெற்றுச் சென்றனர்
இறுதியில் அருண் நன்றி கூறினார்.
வேலூர் மாவட்ட தாலுகா செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக