பின்னர் கீழச்செக்காரக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு அங்கு வரும் வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
பின், சொக்கலிங்கபுரம் கிராமத்தில் வேளாண் பொறியியல் துறை மூலம் விவசாய தோட்டத்தில் சூரிய சக்தி மூலம் இயங்கும் மோட்டார் பொறுத்தப்பட்டுள்ளதையும் அதன் செயல்பாடுகள் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.
ஸ்ரீவைகுண்டம் வட்டம், ஆலந்தா கண்மாய் மற்றும் அணைக்கட்டினை பார்வையிட்டு, பூவாணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தினை பார்வையிட்டார்.
கீழப்பூவாணி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதை தொடர்ந்து உழக்குடி கிராமத்தில் உள்ள உழக்குடி குளத்தில் நிரந்தர சீரமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் பார்வையிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக