சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில், பணப்பட்டுவாடா மற்றும் தீர்வு அமைப்புகள் துறை சார்பில் டிஜிட்டல் வங்கியியல் விழிப்புணர்வு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 19 பிப்ரவரி, 2025

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில், பணப்பட்டுவாடா மற்றும் தீர்வு அமைப்புகள் துறை சார்பில் டிஜிட்டல் வங்கியியல் விழிப்புணர்வு

 


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில், பணப்பட்டுவாடா மற்றும் தீர்வு அமைப்புகள் துறை சார்பில் டிஜிட்டல் வங்கியியல் விழிப்புணர்வு   நிகழ்ச்சி நடைபெற்றது. 


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில்


இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாளர் பிரவீன் மற்றும் சென்னை, பணப்பட்டுவாடா மற்றும் தீர்வு அமைப்புகள் துறை, அதிகாரிகளான ஹஷிதா, ராமகிருஷ்ணன், விக்னேஸ்வரன்ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவ மாணவிகளிடையே டிஜிட்டல் வங்கியைப் பற்றியும், டிஜிட்டல் வங்கி ஏன் அவசியம் என்பதைப் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தனர். மேலும், டிஜிட்டல் வங்கியில் பாதுகாப்பான வழிகள் என்ன என்பதைப்பற்றியும், கட்டண முறையிலான மோசடிகள் குறித்தும், அதை எவ்வாறு களைய வேண்டும் என்பதை குறித்தும் விளக்கிப் பேசினர். மேலும் இணையம் மற்றும் கைபேசி வங்கியியல் மூலம் வழங்கப்படும் சேவைகள் குறித்தும் சிறப்புரையாற்றினர். 


இந்நிகழ்ச்சியை கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி முகமையின் உறுப்பினரும் தொழில் நிர்வாகவியல் துறை தலைவருமான முனைவர் தியாகராஜன் ஒருங்கிணைத்தார். இதில் பேராசிரியர்களும்  மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர். மேலும், இந்நிகழ்ச்சி சார்ந்து வினாடி வினா கேள்விகள் கேட்கப்பட்டு அதில் சரியான பதில் அளித்த 13 மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad