நல்லூர் பேட்டை நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 1954 - 55 ஆம் ஆண்டு பயின்ற மாணவர்கள் 70 ஆண்டுகளுக்குப் பின் குடும்ப கூடல் வைர விழா! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2025

நல்லூர் பேட்டை நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 1954 - 55 ஆம் ஆண்டு பயின்ற மாணவர்கள் 70 ஆண்டுகளுக்குப் பின் குடும்ப கூடல் வைர விழா!


குடியாத்தம் ,பிப் 9 -

வேலூர் மாவட்டம் குடியேற்றம் நல்லூர் பேட்டை நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 1954  55 ஆம் ஆண்டு பயின்ற மாணவர்கள் 70 ஆண்டுகளுக்குப் பின் குடும்ப  கூடல் வைர விழா 
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர் பேட்டை நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 1954 55 ஆம் ஆண்டு பயின்ற மாணவர்கள் 70 ஆண்டுகளுக்குப் பின் குடும்ப கூடல் வைர விழா நிகழ்ச்சி இன்று காலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது
நிகழ்ச்சிக்கு வி ஐ டி கல்வி கோ நிறுவனர் வி ஐ டி பல்கலைக்கழகம் வைர விழா குழு முனைவர் கோ விஸ்வநாதன் அவர்கள் தலைமை தாங்கினார் பொருளாளர் ஜெகதீசன் வரவேற்பு உரையாற்றினார் டாக்டர் வேதகிரி சண்முகசுந்தரம் தொடக் குறையாற்றினார் முன்னாள் தலைமை ஆசிரியர் டி எஸ் விநாயகம் நெல்லூர் பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் நாராயணன்
முன்னாள் தலைமை ஆசிரியர் திருநாவுக் கரசு நெல்லூர் பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி எம் கீதா வள்ளலார் கல்வி குழுமம் தாளாளர் மீரா பழைய மாணவர் சங்கம் தலைவர் சடகோபன்
அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அமர்நாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்கள் நெல்லூர் பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகம் தலைவர் ஜி எஸ் அரசு எம் சி
வாழ்த்துரை குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன்
நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தர ராஜன் ஒன்றிய பெருந்தலைவர் சத்யானந்தம் கே எம் ஜி கலை அறிவியல் கல்லூரி நிறுவனர்கேஎம்ஜி ராஜேந்திரன்
கம்பன் கழக நிறுவனர் ஜே கே என் பழனி வழக்கறிஞர் கே எம் பூபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் இதில் மாநிலங்கள்ளவை உறுப்பினர் டி ராஜா அவர்கள் கலந்து கொண்டு வயிறு விழா சிறப்புரையாற்றினார் இந்நிகழ்ச்சியில் இப்பள்ளியில் படித்த மாணவ மாணவியர்கள் சுமார் 120 குடும்பங்களை சேர்ந்தவர்களை கௌரவிக்கப்பட்டனர்
பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர் இறுதியில் வைர  விழா குழு துணை தலைவர் கேசவன் நன்றி கூறினார்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad