கோத்தகிரி சக்திமலையில் 11.2.2025 செவ்வாய் தைப்பூச திருவிழா. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2025

கோத்தகிரி சக்திமலையில் 11.2.2025 செவ்வாய் தைப்பூச திருவிழா.

 


கோத்தகிரி சக்திமலையில் 11.2.2025 செவ்வாய் தைப்பூச திருவிழா.


நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சக்திமலையில் அமைந்துள்ள அருள்மிகு வள்ளி தெய்வானை உடனமர் அருள்மிகு ஶ்ரீ வெற்றிவேல் முருகன் திருக்கோயில் தைப்பூச திருவிழா 11.2.2025 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறுகிறது. காலை 5 மணிக்கு ஹோமம், காலை 7 மணிக்கு மஹா அபிஷேகம், காலை 10 மணிக்கு மங்கள தீபாராதனை, காலை 11 மணிக்கு சக்கத்தா பஜனை குழுவினர் மற்றும் செல்வி கிருஷ்ணவேணி ஆகியோரின் சிறப்பு பக்தி பஜனை இன்னிசை நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. பக்தகோடிகள் அனைவரும் கலந்துகொண்டு அருள்மிகு சக்திமலை ஶ்ரீ வெற்றிவேல் முருகன் அருள்பெற்றுச்செல்லுமாறு சக்திமலை சக்தி சேவா சங்கத்தினர் அழைப்புவிடுத்துள்ளனர். திருக்கோயில் திருப்பணி நடைபெற்றுக்கொண்டிருப்பதால் பக்தகோடிகள் தங்களால் இயன்ற பொருளுதவியை வழங்கலாம்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad