திருப்பனந்தாளில் ஜூனியர் ரெட் கிராஸ் ஒரு நாள் பயிற்சி முகாம்
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, தமிழ்நாடு கிளை, கும்பகோணம் கல்வி மாவட்டம், திருப்பனந்தாள் ஒன்றிய அளவில் ஜேஆர்சி மாணவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் திருப்பனந்தாள் ஸ்ரீ குமரகுருபரர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. முகாம் சார்ந்த பயிற்சிகளை ஜேஆர்சி ஒருங்கிணைப்பாளர் குமணன் வழங்கினார். மேலும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. நிறைவு விழாவில் தஞ்சாவூர் மாவட்ட இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி துணை சேர்மன் முத்துக்குமார், செயலர் கலைச்செல்வன், மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கர், மாவட்ட ஜேஆர்சி கன்வீனர் ஜான்ஸ்டீபன், கும்பகோணம் ரெட்கிராஸ் துணை சேர்மன் ஆண்ட்ரூரொசாரியோ, டாக்டர் மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக ஜேஆர்சி கவுன்சிலர் அண்ணாதுரை வரவேற்றார். கண்ணன் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை ராஜா தொகுத்து வழங்கினார்.
ஏ மதன்குமார் செய்தியாளர் கும்பகோணம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக