குடியாத்தம் ,பிப் 17 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சிங்கிள் பாடி பகுதியை சேர்ந்தவர் கஸ்தூரி இவர் சொந்தமாக ஆடு மாடுகள் வளர்த்து வருகிறார் இதேபோல் இவருடைய சகோதரர் சண்முகம் என்பவரும் ஆடு மாடு கோழிகள் வளர்த்து வருகிறார் இவருக்கு சொந்தமான நிலம் மேட்டு கொல்ல. பகுதியில் உள்ளது இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல ஆடு மாடுகளை மேய்த்து விட்டு சண்முகம் நிலத்தில் உள்ள கொட்டகையில் ஆடு மாடுகளை கட்டி விட்டு கோழிகளை கூண்டுக்குள் அடைத்து விட்டு வந்துள்ளார் இதே போல் அவரது தங்கை கஸ்தூரி என்பவரும் சண்முகம் நிலத்தில் கொட்டகையில் கட்டி விட்டு வந்துள்ளார் நேற்று காலை நிலத்திற்குச் சென்று. பார்த்த போது சண்முகத்துக்கு சொந்தமான இரண்டு ஆடுகள் 5 கோழிகள் கஸ்தூரிக்கு சொந்தமான ஒரு ஆடு இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் அவர்கள் அக்கம் பக்கம் தேடியும் கோழிகள் கிடைக்கவில்லை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது இது சம்பந்தமாக சண்முகம் கஸ்தூரி ஆகியோர் குடியாத்தம் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்
அதன் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக