மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளி பாபா கார்டன் பள்ளியின் 46 வது பரிசளிப்பு மற்றும் ஆண்டு விழா - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 24 பிப்ரவரி, 2025

மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளி பாபா கார்டன் பள்ளியின் 46 வது பரிசளிப்பு மற்றும் ஆண்டு விழா


 மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளி பாபா கார்டன் பள்ளியின் 46 வது பரிசளிப்பு மற்றும் ஆண்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளி, பாபா கார்டன் பள்ளியின் 46 வது பரிசளிப்பு விழா மற்றும் ஆண்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பள்ளியின் நிறுவனர் அம்மா பி. இராஜேஸ்வரி, மானாமதுரை காவல் துணை ஆய்வாளர் திரு அகஸ்டின் மார்டின் மற்றும் கனரா வங்கி மேலாளர் திருமதி டி. ரம்யா ஆகியோர் கலந்து கொண்டனர். 


இவ்வினிய விழாவில் மாணவர்களின் சிலம்பம், யோகா, கராத்தே போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கராத்தே, யோகா, சிலம்பம் போன்ற போட்டிகளுக்கும் மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. 


46-வது ஆண்டு விழாவில் தலைமை விருந்தினராக தொழிலதிபர் திரு ஏ. ஆர். பி. முருகேசன் அவர்கள் கலந்து கொண்டார்.


சிறப்பு விருந்தினராக வட்டாசியர் திரு ஆர். கிருஷ்ணகுமார், மானாமதுரை காவல் ஆய்வாளர் திரு ஜி. எஸ். ரவேந்திரன், இடைக்காட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளி திரு இ. புவனேஸ்வரன், தலைமையாசிரியர் மற்றும் சிவபுராண செம்மல் ஐயா புதுக்கோட்டை மாவட்டம் கருப்புகுடிபட்டி உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியர் பேச்சாளர் திரு சி. எஸ். முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். 


மேலும் இந்த கல்வியாண்டு முழுவதிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கும், வருகையில் முதல் இடங்களை பிடித்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும், கடந்தாண்டு நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ச்சியாக மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேறியது. 


சிறப்பு விருந்தினர்களுக்கு பள்ளியின் தாளாளர் திரு ஆர். கபிலன்  அவர்கள் பொன்னாடை அணிவித்து கெளரவப் படுத்தினார். பள்ளியின் நிர்வாகி திருமதி ஆர். மீனாட்சி அவர்கள் நினைவு பரிசினை வழங்கினார்.


இவ்விழாவிற்க்கான முன்னேற்பாடுகளை பள்ளியின் முதல்வர் திருமதி எம். சாரதா மற்றும் ஆசிரியர்கள் மேற்கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad