O.P.S வெள்ளாடு தான் அமைதியானவர் எந்த களங்கமும் இல்லாதவர் ஓபிஎஸ் எவ்வழியோ அவ்வழியே நாங்கள் செல்வோம்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த தினத்தை முன்னிட்டு உசிலம்பட்டி MLA ஐயப்பன் தலைமையில் திருமங்கலம் மீனாட்சி அம்மன் கோவிலில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அதிமுக O.P.S அணி சார்பாக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினரும் மேற்கு மாவட்ட தலைவருமான ஐயப்பன் தலைமையில் மதுரை திருமங்கலத்தில் உள்ள மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் ஏழை எளிய மக்களுக்கு இனிப்புடன் மதிய உணவு அன்னதானம் வழங்கப்பட்டது இதில் சுமார் 300க்கும் மேற்பட்டவருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
பிறகு செய்தியாளர்கள் சந்தித்த
MLA ஐயப்பன் O.P.S எவ்வழியோ அவ்வழியே நாங்கள் செல்வோம் என்று கூறினார் எடப்பாடி பழனிச்சாமி கூறிய ஓநாயும் வெள்ளாடும் ஒன்று இணையாது என்ற கேள்விக்கு ஓபிஎஸ் வெள்ளாடு என்றும் ஓபிஎஸ் எந்த களங்கமும் இல்லாதவர் என்றும் ஐயப்பன் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக