சுந்தர பெருமாள் கோவிலில் சலங்கை பூஜை விழா
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சுந்தர பெருமாள் கோவிலில் ஸ்ரீ சீதாராம நாட்டியாலயா பரதநாட்டியம், கா்நாடக சங்கீதப் பயிற்சி மையம் சாா்பில் சலங்கை பூஜை விழா ஸ்ரீ சௌந்தரராஜன் பெருமாள் கோவிலில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஓய்வு (C&F) சீனியர் ஏஜென்ட் ஸ்ரீதரன், அவரது துணைவியார் வேதவல்லி ஆகியோர் தலைமை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தஞ்சாவூர்
சாஸ்தா யுனிவர்சிட்டி டாக்டர் ராகினி,ஸ்ரீ சீதாராம நாட்டியாலயா நடன ஆசிரியர் அத்துழாய் சௌந்தர்ராஜன், ஆகியோா் கலந்துகொண்டு சலங்கை பூஜை விழாவை தொடங்கி வைத்தனா்.
ஸ்ரீ சீதாராம நாட்டியாலயா மாணவிகளின் சலங்கை பூஜை சிறப்பாக நடைபெற்றது. சுந்தர பெருமாள் கோவில் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு, பரதநாட்டிய நிகழ்ச்சியை கண்டுகளித்தனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சௌந்தரராஜன் பெருமாள் கோவில் பட்டாச்சாரியார் ஆ ரா அமுதன் , ரமா உப்பிலி | மற்றும் ஸ்ரீவித்யா,ஸ்ரீ ராமன், ஆகியோர் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக