இலவம்பாடி ஊராட்சியில் போலி கணக்குகள் தயாரித்து சுமார் ரூ.50 லட்சம் வரை மாபெரும் கொள்ளை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அம்பலம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 15 பிப்ரவரி, 2025

இலவம்பாடி ஊராட்சியில் போலி கணக்குகள் தயாரித்து சுமார் ரூ.50 லட்சம் வரை மாபெரும் கொள்ளை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அம்பலம்!



அனணக்கட்டு ,பிப் 15 -
அரசு ஊழியர்களின் மெத்தன போக்கு, அலட்சியம் மற்றும் கூட்டு சதி திட்டமும் இலவம்பாடி ஊராட்சியில் போலி பில்கள் தயாரித்து சுமார்  ரூ.50 லட்சம் வரை மாபெரும் கொள்ளை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அம்பலம்
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், இலவம்பாடி ஊராட்சியில் அப்பாவி பொதுமக்களின் வரிப் பணத்தை, ஜானகிராமன் ஊராட்சி மன்ற தலைவர் என்று பெயரில் போலி பில்கள் தயார் செய்து சுமார் 50 லட்சம் வரை நூதன முறையில்கணக்கு காட்டி  எடுத்து கொண்ட பணம் (சமீப ஆண்டுகளின் வண்டவாளம் மட்டுமே இது). ஊராட்சி மக்களுக்கு செய்ய வேண்டிய திட்டங் களை செய்யாமல் செய்ததாக பணத்தை அப்படியே முழுங்கி மாபெரும் கொள்ளை யடிக்கப்பட்டிருந்த நிலையில் காசோலை அதிகாரம் நிறுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அரசின் தனியறை ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 205 ன் கீழ் தகுதி நீக்கம் வரை நெருங்கப்பட்டுள்ளது. இலவம்பாடி ஊராட்சி மன்றத் தலைவர் ஜானகிராமன் பதவி விரைவில் பறிபோகும் என்பதை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கின்றோம். இந்த மாபெரும் கொள்ளைகளுக்கு உடந்தையாக இருந்த வட்டார வளர்ச்சித்துறை நிர்வாகிகள் மீதும் தக்க சட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்ய வேண்டும், முறைகேடு செய்து கொள்ளையடித்த பணத்தை மீண்டும் அரசு கஜானாவில் செலுத்தவும், அவர்கள் மீது சட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுத்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து நீதிமன்றம் வாயிலாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்களின் சார்பாக கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. குறிப்பு எடுத்துக் காட்டாக வேறு எங்கும் இது போன்ற ஊழல்கள் நடக்கக்கூடாது எனவும் நடந்தால் அரசு கடுமையான நடவடிக் கைகள் மேற்கொள்ளும் என புரிந்து கொண்டு இந்த நாட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. பொதுமக்களின் கவனத்திற்கு:- பொதுமக்கள் எந்த திட்டம் வேண்டுமானாலும் உங்கள் விருப்பத் திற்கு இணங்க அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் உங்கள் கோரிக்கை மனுக்களை வழங்கலாம் கோரிக்கையின் அடிப்படையில் பொது மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் தரமான முறையில் அரசு விதிமுறைப்படி 100 சதவீதம் நிறைவேற்றுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad