நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக மற்றும் நெமிலி பேரூர் திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 56 வது நினைவு நாள் அனுசரிப்பு மலர் தூவி மரியாதை! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 3 பிப்ரவரி, 2025

நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக மற்றும் நெமிலி பேரூர் திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 56 வது நினைவு நாள் அனுசரிப்பு மலர் தூவி மரியாதை!

நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக மற்றும் நெமிலி பேரூர் திமுக சார்பில்
ராணிப்பேட்டை,பிப் 3 -
ராணிப்பேட்டை நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக மற்றும் நெமிலி பேரூர் திமுக சார்பில்பேரறிஞர் அண்ணா அவர்களின் 56வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது, இந்நிகழ்ச்சியில்  நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளர் மற்றும் நெமிலி ஒன்றிய பெருந்தலைவர், வடிவேலு அவர்கள் தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர், ஜனார்த்தனன் முன்னிலை வகித்தார்.இந்நிகழ்ச்சியில், நெமிலி பஜாரில் அமைதி ஊர்வலமாக சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர், பவானி வடிவேலு, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர், சரவணன், நெமிலி கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் புருஷோத்தமன், துணைச் செயலாளர்கள், முகமது அப்துல் ரகுமான், பாண்டியன், நெமிலி கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள், கிளைக் கழகச் செயலாளர்கள், வட்ட செயலாளர்கள், அணிகளின் நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் ஆகியோர் கலந்து கொண்டனர்!

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad