சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியின் 75 ஆம் ஆண்டு பவள விழா சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது . அதன் நிகழ்வாக முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளியின் 75ஆம் ஆண்டு பவள விழாவை முன்னிட்டு பள்ளி முன்னாள் மாணவர்களுடன் முதல் சந்திப்பு நிகழ்வு பள்ளியில் நடைபெற்றது. உதவி தலைமை ஆசிரியர்திரு. ரமேஷ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார் தலைமமை ஆசிரியர் திரு. ராஜபாண்டியன் தலைமையேற்று பள்ளி வளர்ச்சி பற்றியும் பள்ளி 75ஆம் ஆண்டு பவள விழா நிகழ்வுகள் பற்றி சிறப்புரையாற்றினார். முன்னாள் மாணவர்களோடு இணைந்து பள்ளியின் பவள விழாவை சிறப்பாக நடத்துவது என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஓவிய ஆசிரியர் திரு. முத்துப்பாண்டியன் அவர்களும் மற்றும் அறிவியல் ஆசிரியர் திருமதி.வாசுகி அவர்களும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக