முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு உளுந்தூர்பேட்டையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒரு வருடத்திற்கான மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாமை துவக்கி வைத்த மாவட்ட கழகச் செயலாளர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் முன்னிட்டு சென்னை தி.நகரில் உள்ள ராதாத்ரி நேத்தராலயா கண் மருத்துவமனை மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாமினை கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட கழக செயலாளரும்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இரா.குமரகுரு தலைமையில் நடைபெற்ற இந்த முகாமினை எம்ஜிஆர் மற்றும் அம்மாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து பேசிய மாவட்ட கழக செயலாளர் குமரகுரு ஒரு வருடம் தோறும் மாதம் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து இந்த இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெறும் எனதெரிவித்தார். இந்த மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாமில் திறமை மிக்க மருத்துவர் குழுவினர் மற்றும் அதிநவீன உபகரணங்களை கொண்டு பொதுமக்களுக்கு கண் சிகிச்சை, உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், பல் நோய், இ.சி.ஜி பரிசோதனை மற்றும் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு பல்வேறு நோய்களுக்கு இலவசமாக பரிசோதனை செய்தும், கண் நோயினால் பாதிக்கப்பட்ட அவர்களுக்கு இலவசமாக மூக்கு கண்ணாடியும் வழங்கப்பட்டது. தொடர்ந்து நாள் முழுவதும் நடைபெற்ற இம் மருத்துவ முகாமில் கலந்து கொண்ட பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் கழக மருத்துவர் அணி இணைச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான காமராஜ், கழக மருத்துவர் அணி துணைச் செயலாளர் மருத்துவர் பொன்னரசு, மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி, உள்ளிட்ட பொது மருத்துவர்கள் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் இந்த முகாமில் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழக குரல் D.செல்வம் உளுந்தூர்பேட்டை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக