ஸ்ரீவைகுண்டம் - நத்தம் எம் இடர் கடிவான் கருட சேவை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 28 பிப்ரவரி, 2025

ஸ்ரீவைகுண்டம் - நத்தம் எம் இடர் கடிவான் கருட சேவை.

ஸ்ரீவைகுண்டம் - நத்தம் எம் இடர் கடிவான் கருட சேவை. 

ஸ்ரீவைகுண்டம் பிப்ரவரி 27.நவதிருப்பதி கோவில்களில் இரண்டாவது திவ்யதேசம் நத்தம் விஜயாசன பெருமாள் கோயிலாகும். மாசி பிரம்மோத்ஸவத்தை முன்னிட்டு நேற்று கருட சேவை நடந்தது. 

கடந்த பிப் 22 - ந்தேதி நத்தம் கோயிலில் கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோற்சவம் துவங்கியது. நேற்று காலை 7 மணிக்கு விஸ்வரூபம் 9 மணிக்கு திருமஞ்சனம். 10 மணிக்கு திருவாராதனம். பின்னர் 12 மணிக்கு நாலாயிர திவ்ய பிரபந்தம் சேவை திருவாய்மொழி பிள்ளை திருமலாச்சாரியார். சீனிவாசன். பட்சி ராஜன். திருவேங்கடத்தான். வீரராகவன் வேங்கட கிருஷ்ணன். ஆகியோர் சேவித்தனர். 

பின்னர் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 6.30மணிக்கு சாயரட்சை. 7 மணிக்கு எம் இடர் கடிவான் வாகன குறட்டிற்கு எழுந்தருளி அர்ச்சகர்கள் கண்ணன். ரகு. சுந்தரராஜன். ராஜகோபாலன் ஆகியோர் கருட வாகனத்தில் அலங்காரம் செய்திருந்தனர். 8 30 மணிக்கு கருட வாகனத்தில் புறப்பாடு ஆகி மாட வீதி. மற்றும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 

இந்நிகழ்வில் ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி.சீனிவாசன். தேவராஜன். கண்ணன். அறங்காவல்குழுத் தலைவர் அருணாதேவி கொம்பையா. உறுப்பினர்கள் மாரியம்மாள் சண்முகசுந்தரம். முருகன் முத்துகிருஷ்ணன். பாலகிருஷ்ணன். நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன். 

ஆய்வாளர் முருகன். டாக்டர் கோகுல். டாக்டர் சுதா. நீதிபதி மகராஜன்.சீனிவாச அறக்கட்டளை சூப்பர்வைசர்கள் பரகாலசிங்கன். பாலாஜி. பத்மநாபன். ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad