HCL Foundation-ன் Samuday திட்டம் மூலம் விளாத்திக்குளம் ஊராட்சி ஒன்றியம் கே.தங்கம்மாள்புரம் ஊராட்சியில் உள்ள நீராவி ஊரணியை புதுப்பித்தல் திட்டத்தில் ஊரணி தூர்வாரப்பட்டு, கருங்கற்கள் மூலம் கரையை பலப்படுத்தி, சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு, வரத்துக்கால்வாய், தடுப்பணை மற்றும் மண்வடிகட்டியை சீரமைக்கும் பணிகள் மேற்க்கொள்ளப்பட்டுள்ளது.
இதனை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தலைமையில், ஆணையர் ஊரக வளர்ச்சித் துறை சென்னை பி.பொன்னையா இன்று 28.02.25 பார்வையிட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.
இவர்களுடன் கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா, அரசு அதிகாரிகள் அலுவலர்கள் நேரில் பார்வை இட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக