மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாற்றுத்திறனாளி களுக்கான அனைத்து துறைகள் ஒருங். கிணைந்து சிறப்பு முகாம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 15 பிப்ரவரி, 2025

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாற்றுத்திறனாளி களுக்கான அனைத்து துறைகள் ஒருங். கிணைந்து சிறப்பு முகாம் !


குடியாத்தம் ,பிப் 14 -
வேலூர் மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாற்றுத்திறனாளி களுக்கான அனைத்து துறைகள் ஒருங். கிணைந்து சிறப்பு முகாம். வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று காலை மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து துறைகள் ஒருங்கிணைந்து சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது

நிகழ்ச்சிக்கு வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி தலைமை தாங்கினார்
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சரவணன் முன்னிலை வகித்தார் வட்டாட்சியர் மெர்லின் ஜோதிகா வரவேற்புரையாற்றினார்
இந்நிகழ்ச்சிகள் சிறப்பு விருந்தினராக வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே இரா சுப்புலட்சுமி அவர்கள் கலந்து கொண்டு தலைமை உரை ஆற்றினார்
தமிழக முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டத்திலும் மாற்றுத் திறனாளிகளான சிறப்பு முகாம் நடைபெறுகிறது மாற்றுத்திறனாளி களுக்கான முகாமும் நடைபெறும் தேதிகள் நடைபெற இடங்களை மக்கள் பிரதிநிதிக்கு தகவல் கொடுத்து முகாம் நடைபெறுகிறது முகாம் நடைபெறு வதற்கு துறைவாரியான அதிகாரி நியமனம் செய்து இதில் மாற்றுத் திறனாளிகள் பயன்படும் வகைகள் தேசிய அடையாள அட்டை பெறுவதற்கு மற்றும் பெட்ரோல் ஸ்கூட்டர் மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வு ஊதியம் மாற்றுத்திறனாளிகளுக்கு வீல் சேர் காது கேட்கும் கருவி கண் பரிசோதனை என்று தனித்தனியாக ஸ்டால்கள் அமைக் கப்பட்டு மனுக்கள் பெறப்பட்டன
குளிதிகை பகுதியைச் சேர்ந்த கைருனிஷா என்ற மாற்றுத்திறனாளிக்கு மனு கொடுத்த சிறிது நேரத்திலேயே மேடையில் நவீன வசதிகளுடன் கூடிய வீல் சேர் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள் வீட்டுமனை பட்டாக்கள் உழவர் பாதுகாப்பு அட்டை போன்றவை வழங்கினார் பிறகு  தலைமை அரசு மருத்துவமனைக் சென்று ரத்த வங்கி பெண்கள் வார்டு ஆய்வகம் மற்றும் புதிதாக கட்டப்படும் மருத்துவமனை கட்டிடங்களை ஆய்வு செய்தார்
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய பெருந் தலைவர் என் இ சத்யானந்தம் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் 500க்கும் மேற்பட்ட  மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad