கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் தேவபாண்டலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக தாய்மொழி தினம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 22 பிப்ரவரி, 2025

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் தேவபாண்டலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக தாய்மொழி தினம்


 கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் தேவபாண்டலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டது 


 கல்லை மாவட்ட முத்தமிழ்ச் சங்கம் சார்பாக உலக தாய்மொழி நாள் விழா தேவபாண்டலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது, நிகழ்விற்கு பள்ளி தலைமையாசிரியர் ஞானமூர்த்தி தலைமை தாங்கினார்,முத்தமிழ்ச் சங்கத் தலைவர் முருககுமார் வரவேற்புரையாற்றினார், பள்ளி உதவி தலைமையாசிரியர் சென்னம்மாள்,பாண்டலம் ஊராட்சி மன்றத் தலைவர் பாப்பாத்தி நடராசன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அண்ணாமலை, கார்குழலி அறக்கட்டளைத் தலைவர் தாமோதரன், தமிழ்ப்படைப்பாளர் சங்க துணைத்தலைவர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசும் பாராட்டுச் சான்றும் வழங்கப்பட்டது, நிகழ்வின் இறுதியில் முத்தமிழ்ச்சங்க துணைச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார், பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்


 கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad