திருச்செந்தூர் அருகே ஆலந்தலை இயேசுவின் திரு இருதய அற்புதக் கெபி திருத்தலத்தில் பிப்ரவரி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையொட்டி ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் சிலுவை இயேசு திரு உருவம் பவனி நடைபெற்றது. மீனவர் சங்க கட்டிடம் முன்பு இருந்து பவனியாக எடுத்துவரப்பட்டு திருத்தலத்தில் ஆயரால் மலர் மாலையிடப்பட்டது.
தொடர்ந்து ,ஆயர் தலைமையில் திருப்பலி நடைபெற்றது.இயேசு கிறிஸ்து இவ்வுலகில் பிறந்து 2025 ம் ஆண்டு யூபிலி விழாக் கொண்டாட்ட நிகழ்வின் பொருட்டு மணப்பாடு வட்டாரத்திலுள்ள 22 ஊர்களில் கூட்டப்புளியிலிருந்து துவங்கி
ஆறுமுகநேரி வரையிலுள்ள கிறிஸ்தவ ஊர்களிலுள்ள ஊர் பொதுமக்கள்,பங்கு தந்தையர்கள், அருட் சகோதரிகள்,மற்றும் ஆலந்தலை ஊர் பொதுமக்கள் என அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இறுதியில் மணப்பாடு வட்டாரத்திலுள்ள 8 புனித வின்சென்ட் தே பவுல் கிளைச்சபையினருக்கு நலத்திட்ட உதவிகளை ஆயர் வழங்கினார். திருப்பூரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் அற்புத அரசருக்கு தங்கமுலாம் பூசிய மணிமகுடம்(கிரீடம்) வழங்கினர்.
மணிமகுடத்தினை கல்லாமொழி பங்கு தந்தை பென்சிகர், அற்புத அரசரின் திருஉருவத்திற்கு அணிவித்தார்.விழா ஏற்பாடுகளை திருத்தல அதிபர் சில்வெஸ்டர், துணை பங்கு தந்தை. ஜோதிமணி, திருத்தொண்டர் ஸ்டாலின் மற்றும் ஊர்நலக்கமிட்டியினர் செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டார கடலோர பகுதியைச் சேர்ந்த மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக