நெல்லை மாவட்டத்தின் 224 வது புதிய ஆட்சியராக மருத்துவர் இரா சுகுமார் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 8 பிப்ரவரி, 2025

நெல்லை மாவட்டத்தின் 224 வது புதிய ஆட்சியராக மருத்துவர் இரா சுகுமார் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.

நெல்லை மாவட்டத்தின் 224 வது புதிய ஆட்சியராக மருத்துவர் இரா சுகுமார் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். 

முதல்வரின் அறிவுரைப்படி முதல்வரின் முகவரி மனுநீதிநாள் முகாமில் மக்களிடம் பெறப்படும் மனுக்களுக்கு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் அதோடு மகளிர் உரிமைத் தொகை விடியல் பயணம் உள்ளிட்ட அரசின் சிறப்பு திட்டங்கள் மீது கவனம் செலுத்தி சிறப்பாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் மாவட்டத்தில் சட்ட ஒழுங்கும் முறையாக பராமரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
     
நெல்லை மாவட்டத்தில் ஆட்சியராக பணியாற்றி வந்த கார்த்திகேயன் எல்காட் நிர்வாக இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து நெல்லை மாவட்டத்தின் 224- வது புதிய ஆட்சியராக மருத்துவர் இரா சுகுமார் நியமிக்கப்பட்டார். அவர் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியராக முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். 

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தொன்மை, வரலாறு, வீரம் கலை ,இலக்கியம் என பல்வேறு நிலைகளில் தனித்துவத்துடன் சிறந்து விளங்கும் நெல்லை மாவட்டத்தில் ஆட்சியராக பணியாற்ற வாய்ப்பு அளித்த தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன், 

 முதல்வர் அவர்கள் சில அறிவுரைகளை வழங்கி உள்ளார்கள் அதன்படி பொதுமக்களின் கோரிக்கைகளை இன்முகத்துடன் கேட்டு பணியாற்ற வேண்டும் முதல்வர் முகவரி, மக்கள் மனுநீதிநாள் முகாமில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி உடனடியாக தீர்வு காண வேண்டும் என கூறியுள்ளார்கள் அதன்படி எனது பணி அமையும், 

மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கும், மக்கள் நலத் திட்டங்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதோடு அரசின் சிறப்பு திட்டங்களான தமிழ் புதல்வன் திட்டம் புதுமைப்பெண் திட்டம் நான் முதல்வன் திட்டம் மகளிர் உரிமைத்தொகை இல்லம் தேடி மருத்துவம் உள்ளிட்ட சிறப்பு திட்டங்களுக்கும் மாற்றுத்திறனாளிகள் நலனிலும் கூடுதல் கவனம் செலுத்தப்படும். 

மாவட்டத்தில் சட்ட ஒழுங்கை நிலை நாட்டுவதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் மாவட்டத்தில் ஒவ்வொரு துறைகளின் சார்பில் நடந்து வரும் திட்ட பணிகளில் சுனக்கம் ஏற்பட்டால் அவற்றில் கள ஆய்வு மேற்கொண்டு அந்தப் பணிகளை விரைந்து முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 
   
தாமிரபரணி நதியை சுத்தம் செய்வது என்பது ஒரு சவால் நிறைந்த பணியாகும் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து தமிழக அரசின் வழிகாட்டுதலோடு அந்தப் பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் கனிம வளங்கள் லாரிகள் மூலம் அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக செய்தியாளர் கேட்டதற்கு விதிமுறைகளை மீறி செயல்படும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 

மாவட்டத்தில் அதிக அளவு கால்நடைகள் உள்ளதால் பால் வளத்தை பெருக்க வேண்டும் என்பது எனது திட்டமாக வைத்துள்ளேன் அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும் என தெரிவித்தார் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad