டெல்லி சட்டமன்ற தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் பாரதிய ஜனதா கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.
இதை முன்னிட்டு நெல்லை வண்ணாரப்பேட்டையில் பாரதிய ஜனதா கட்சியினர் மாவட்ட தலைவர் முத்து பலவேசம் தலைமையில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.
நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் கணேச மூர்த்தி, மாவட்ட செயலாளர் நாகராஜன், வக்கீல் வெங்கடாசலம் என்ற குட்டி, நிர்வாகிகள் முருகதாஸ், டாக்டர் தீபா, எல்.டி. தாஸ், மலையரசன், கார்த்திக் நாராயணன், டி.வி.சுரேஷ், முத்து, மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக