திருக்கோவிலூர் மின்சார வாரியம் மற்றும் வீரட்டகரம் ஊராட்சி நிர்வாகத்திற்கு இத்தனை நாள் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? மக்கள் கேள்வி: - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 8 பிப்ரவரி, 2025

திருக்கோவிலூர் மின்சார வாரியம் மற்றும் வீரட்டகரம் ஊராட்சி நிர்வாகத்திற்கு இத்தனை நாள் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? மக்கள் கேள்வி:

 


திருக்கோவிலூர் மின்சார வாரியம் மற்றும் வீரட்டகரம் ஊராட்சி நிர்வாகத்திற்கு இத்தனை நாள் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? மக்கள் கேள்வி:


 கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த வீரட்டகரம் கிராமத்தில் கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்பு சுமார் 500 குடும்பங்கள் உள்ள ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதிக்குச் செல்லும் மின்மாற்றி பழுதடைந்து விட்டது இதற்கு மாற்று வழியாக வேறொரு பகுதிக்கு செல்லும் மின்மாற்றியில் இருந்து மின் இணைப்பைக் கொடுத்து  மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.  இதனால் இந்த ஆதிதிராவிடர் பகுதியில் குறைந்த மின்னழுத்தம் நிலவிக் கொண்டிருக்கிறது. இந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் குறைந்த மின்னழுத்தத்தால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் தொடங்க இருக்கும் நிலையில் பள்ளி மாணவர்கள் தேர்வுக்கு படிக்க போதிய வெளிச்சம் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். வயதானவர்களும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். மேலும் குடும்பத் தலைவிகள் மிக்ஸி, கிரைண்டர், பிரிட்ஜ், போன்ற மின்சாதன பொருட்களை பயன்படுத்தி சமையல் செய்ய முடியாமல் குறைந்த மின்னழுத்தத்தால் தவித்து வருகின்றனர். சில வீடுகளில் எண்ணற்ற மின்சாதன பொருட்கள் பழுதடைந்துள்ளன. இந்த நிலை ஊராட்சி நிர்வாகத்திற்கு தெரிந்தும் கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர் என்பது பொதுமக்களின் கருத்து. எனவே ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி செயலர், திருக்கோவிலூர் மின்வாரியம் ஆகியோர் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய மின்மாற்றி அமைத்து சரியான அளவில் மின்சாரத்தை வழங்க வேண்டும் என்பது பொது மக்களின் கோரிக்கை.இரவு நேரங்களில் தேர்வுக்காக மாணாக்கர்கள் படிக்க தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தமிழ்நாடு மின்வாரியம் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad