சேதுபாவாசத்திரம் வட்டார அளவிலான சிறார் திரைப்பட போட்டிகள்
பேராவூரணி, பிப்.17 - தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ( 6 முதல் 9 - ஆம் வகுப்பு வரை) சிறார் திரைப்படப் போட்டிகள் குருவிக்கரம்பை அரசு மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
கதை & வசனம், ஒளிப்பதிவு மற்றும் நடிப்பு மூன்று தலைப்புகளில் போட்டிகள் நடைபெற்றது. பள்ளியளவில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகள் இப் போட்டிகளில் கலந்து கொண்டனர்.
போட்டியை பள்ளி தலைமையாசிரியர் (பொ) சுபாஷ்கரன் தலைமை ஏற்று துவக்கி வைத்தார். வட்டாரக் கல்வி அலுவலர்கள் எம்.கே.ராமமூர்த்தி, சு.சிவசாமி மற்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர் அ.முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இப்போட்டியில் 90 மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுநர் அ.ரா.சரவணன் செய்திருந்தார். வட்டார அளவில் முதலிடம் பெரும் மாணவர்கள், மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.போட்டிகளுக்கான நடுவர்களாக ஆசிரியர்கள் செயல்பட்டனர்.
பேராவூரணி த.நீலகண்டன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக