தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 15 பிப்ரவரி, 2025

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம்!

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம்

வேலூர் ,பிப் 15 -
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூர் மாவட்ட பொதுக்குழு  கூட்டம் வேலூர் (மாவட்ட அலுவலகத்தில்) பெல்லியப்பா கட்டிடத்தில் நடைபெற்றது.  மாவட்ட துணைத்தலைவர் கே.விசுவ நாதன் மாவட்ட தலைவர் முனைவர்  பே.அமுதா ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.  வேலூர் கிளை செயலாளர் முத்து.சிலுப்பன் வரவேற்று பேசினார்.  மாவட்ட செயலாளர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன், மாவட்ட பொருளாளர் வீ.குமரன் ஆகியோர் அறிக்கைகள் சமர்பித்து பேசினர். 
மாவட்ட துணைத்தலைவர்கள் பேராசிரியர் க.தேவி  ரா.காயத்திரி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்கள்.மாநில துணைத்தலைவர் முனைவர் என்.மாதவன் மாவட்ட செயல்பாட்டு அறிக்கையினை வெளியிட்டு பொதுக்குழுவினை தொடக்கிவைத்து பேசினார்.
நஞ்சில்லா உணவும் நலமான வாழ்வும் என்ற தலைப்பில் அரசு சித்த மருத்துவர் சோ.தில்லைவாணன் பேசினார் அப்போது அவர் கூறியதாவது..
இயற்கை உரங்கள் பயன்படுத்தி விளைக்கப்பட்ட காய்கறிகளையே சமையலுக்கு பயன்படுத்த வேண்டும்.  நாம் தினமும் காய்கறிகள், பழங்கள் குறிப்பிட்ட அளவிற்கு உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் ஆரோக் கியமாக இருக்கும்.  இயற்கை நிரமிகள் பயன்படுத்திய உணவுகளை உட்கொள்வது சிறப்பு என்றார்.  மேலும் காலை உணவினை தவிர்க்ககூடாது என்றார்.  தற்போது வேலூரில் இயங்கி வரும் மக்கள் நல சந்தையில் நஞ்சிலா காய்கறிகள் விற்படுகிறது மக்கள் வாங்கி பயன்பெற வேண்டுமென கேட்டுக்கொண்டார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மற்றும் முன்னாள் மாநில பொருளாளர் கு.செந்தமிழ்செல்வன் எதிர்கால திட்டங்கள் குறித்து பேசினார்.
மாவட்ட இணைசெயலாளர்கள் எ.பாஸ்கர், மு-பிரபு, பி.ரவீந்திரன் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பா.ராஜேந்திரன், சா.குமரன் கிளை செயலாளர்கள் முத்து.சிலுப்பன்,  ஆர்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினர்.
கே.வி.குப்பம் ஒன்றியத்தின் நிர்வாகியாக செயலாற்றிய தோழர் நெட்டேரி அமுதா அவர்களின் மறைவுக்கும் வேலூர் கிளையின் நிர்வாகி சிவா அவர்களின் மறைவுக்கும் இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது
1. பொதுக்கல்வி முறையை வலுப்படுத்தும் வகையில் அனைத்து அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் நிர்வாக பணியாளர்களின் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டுமென தமிழக அரசை கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2. அனைத்து அரசு பள்ளிகளிலும் கழிப்பறை வசதி, பாதுகாப்பான குடிநீர், இருக்கைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உத்தரவாதப்படுத்த தமிழக அரசை கோரி தீர்மாமனம் நிறைவேற்றப்பட்டது.
3. அனைத்து நிலை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் கற்றல் கற்பித்தல் பணிகளை தவிர மற்ற அலுவல் சார்ந்த பணிகளை முற்றாக கல்வித்துறை கைவிட வேண்டும்.
4. வேலூர் மாநகரத்திற்கு உட்பட்ட குடியிருப்பு பகுதி சாலைகள் மற்றும் பொது வழி சாலைகள் போக்குவரத்திற்கு தகுதி இல்லாமல் குண்டும் குழியுமாக உள்ளன.  உரிய அரசுத்துறைகளும், மாநகராட்சி நிர்வாகமும் உரிய நடவடிக்கை உடன் மேற்கொண்டு சாலைகளை சீரமைத்து சுகாதாரமான ஆராக்கியமான வாழ்விடமாக உயர்த்திட வேண்டுகின்றோம்.
5. வேலூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 15 ஆண்டுகள் மேலாகியும் பொதுப் போக்குவரத்துக்கான மாற்று சாலைகள் அமைக்கப்படாமல் மாநகர மக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர்.  மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு மாற்று சாலைகள் அமைக்க ஆவண செய்ய வேண்டுகின்றோம்.
6. வேலூர் மாநகரத்தின் மையப்பகுதியில் பயன்பாடு இன்றி உள்ள அண்ணா கலையரங்கை சீரமைத்து அல்லது புதியதாக கட்டமைத்து வேலூர் மக்களின் கல்வி, கலாச்சாரம் மற்றும் கலை இலக்கிய நிகழ்வுகள் நடத்துவதற்கு உரிய அரங்குகளாக அமைக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
7. வேலூர் கோட்டையை மக்கள் வந்து செல்லும் வகையிலும் சுற்றுலா தலமாக மேம்படுத்தவும் மக்கள் இப்பகுதிகக்கு பாதுகாப்பாக வந்து செல்ல வசதிகள் ஏற்படுத்த வேண்டுமென கோருகின்றோம்.
8. ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் வேலூரில் புத்தக திருவிழா நடத்திட வேண்டுமென மாவட்ட நிர்வாகத்தினை கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
9. அனைத்து அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் கட்டாயமாக தமிழ்வழி பிரிவுகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும்.
முடிவில் பொருளாளர் வீ.குமரன் நன்றி கூறினார்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

1 கருத்து:

  1. சிறப்பான பதிவு. முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழக குரல் சமூக ஊடகத்திற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

Post Top Ad