வேலூர்,பிப்.15-
வேலூர் மாவட்டம் இருசக்கர வாகனத்தில் செல்போன் பேசிக்கொண்டு வந்தவரை தீவிரவாதியை பிடிப்பதை போல் மடக்கி பிடித்து தாக்கிய காவல் ஆய்வாளர். ஏன் அடித்தீர்கள் என இளைஞர் வாக்குவாதம் செய்தார். தான் குற்றம் செய்யாத நிலையில் தன்னை ஏன் அடித்தீர்கள்? என கேட்டவரை ஜீப்பில் தள்ளி காலை உடைத்து சேதப்படுத்திய காவல் துறையினரின் மனிதாபிமானமற்ற செயலால் மக்கள் அதிர்ச்சியடைந்து ள்ளனர்.வேலூர் மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரி பகுதியிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் சீனிவாசன் (பொறுப்பு சத்துவாச்சாரி காவல் நிலையம்) பணியில் இருந்த போது பாபு என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தில் செல்போனில் பேசிக்கொண்டே வந்தார். அதைக் கண்ட ஆய்வாளர் சீனிவாசன் இருசக்கர வாகனத்தை மடக்கி நிறுத்தி இருசக்கர வாகனத்தை விட்டு கீழே இறங்குமாறு கூறினார். இளைஞர் பாபு கீழே இறங்கிய போது ஏன் செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுகிறாய்? எனக் கூறி திடீரென ஆய்வாளர் சீனிவாசன் பாபுவை கைகளால் ஓங்கி அடித்தார். இதனால் நிலை குலைந்த பாபு ஆய்வாளரிடம் என்னை ஏன் அடித்தீர்கள்?. நான் என்ன குற்றம் செய்தேன்? என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் வாக்குவாதத்தின் போது ஆய்வாளரைத் தகாத வார்த்தைகளால் பாபுவும் திட்டினார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆய்வாளர் சீனிவாசன் பாபுவை சரமாரியாகத் தாக்கி போலீஸ் வாகனத்தில் தள்ளி உள்ளே தூக்கி போட்டு கட்டாயப்படுத்தி ஏற்றினார் அப்போது பாபுவின் இரண்டு கால்களும் வெளியில் இருந்த நிலையில் கதவால் அடித்து அவரது காலை சேதப்படுத்தினார். பாபுவின் முகத்திலும் ஒரு குத்து விட்டார். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செல்போன் பேசி வந்தவரை தீவிரவாதியை மடக்கிப் பிடிப்பதை போல் பிடித்து அடித்து மூக்கில் குத்தி குண்டு கட்டாக பாபுவை தூக்கி போலீஸ் வாகனத்தில் ஏற்றிய சம்பவம் மனிதாபிமானற்ற செயல் என கூறி பொதுமக்கள் பலர் முகம் சுளித்தனர்.
காவல்துறையினர் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டுமென அறிவுறுத்திய நிலையிலும் இது போல ஒரு சிலர் அராஜகமாக செயல்படுவது அந்த துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை ஒரு வேளை இதுதான் கனிவுடன் நடத்துவது என்று அந்த ஆய்வாளர் நினைத்து விட்டாரோ என்னவோ?. போலீசாரால் தாக்கப்பட்ட பாபு வேலூர் சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்தவர். எலெக்ட்ரிஷீயனாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக