காட்பாடி பாரதி நகரில் படிப்பில் கவணம் செலுத்தாதல் தாய் கண்டித்தற்காக தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவர்!
வேலூர் மாவட்டம் காட்பாடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பாரதி நகர் பகுதியில் வசித்து வருபவர் கலைச்செல்வி இவரது மகன் சென்னை அடுத்த மகாபலிபுரத்தில் பி.காம் படித்து வந்துள்ளார் படிப்பில் சரியாக கவனம் செலுத்தாததால் தாய் கண்டித்துள்ளார் கடந்த (12:02:2025) அன்று தன் உறவினர்கள் திருமணத்திற்காக கர்நாடக மாநிலம் பெங்களூர் கலைச்செல்வி அவரது மகன் காமேஷ் வயது:21 ஆகியோர் சென்றுள்ளனர் திருமணம் நிகழ்ச்சியில் உறவினர்கள் கலைச் செல்வியிடம் உன் மகன் படிப்பு எப்படி உள்ளது என்று கேட்டதற்கு கலைச்செல்வி சரியாக படிப்பில் கவனம் செலுத்தாதல் என் மகன் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை அரியர் எழுதுவதற்காக காத்து இருக்கிறான் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது உறவினரிடையே தன்னை தாய் இதுபோன்ற போன்று செல்லி விட்டாரே என காமேஷ் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தார்(13:02:2025) அன்று பெங்களூரில் இருந்து யாருக்கு சொல்லாமல் காட்பாடி பாரதி நகர் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது மறுநாள் (14:02:2025)அன்று திருமணம் முடித்துக் கொண்டு கலைச்செல்வி காட்பாடி பாரதிநகர் வீட்டிற்கு வந்துள்ளார் வீட்டின் கதவை தட்டிப் பார்த்தபோது கதவு திறக்காததனால் ஜன்னல் வழியாக பார்த்த போது காமேஷ் வயது:21 என்பவர் வீட்டு அறையில் மின்விசிறியில் புடவையில் தூக்கிலிட்டு தொங்கியபடி இருந்துள்ளார் அதிர்ச்சி அடைந்த கலைச்செல்வி சத்தம் போட்டுள்ளார் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து பார்த்து காட்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் தகவல் அறிந்து விரைந்து சென்ற காட்பாடி காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன், காவலர் வினோத்குமார், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இறந்த காமேஷின் தாயார் கலைச்செல்வி காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் காட்பாடி காவல் உதவியாளர் குமார், வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக