திருநெல்வேலி மாவட்டம் உவரியில் உள்ள பிரசித்தி பெற்ற கோடி அற்புதர் புனித அந்தோணியார் திருத்தலத்தின் ஆண்டு திருவிழா கடந்த 4 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவையொட்டி தினமும் காலை , மாலையில் திருப்பலி, நற்கருணை ஆசீர், மறையுரை நடைபெறுகிறது. 12ம் நாள் திருவிழா மாலை ஆராதனை நடைபெற்றது. தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி சிறப்பு நற்கருணை ஆசீர் வழங்கினார்.
அப்போது, எல்லோரும் நம் இல்லங்களில் ஜெபிக்க வேண்டும். அந்தோனியார் நாம் அனைவரும் ஜெபிப்பதை விரும்புகிறார். ஜெபத்தை போல வல்லமை கொண்ட கருவி இந்த உலகில் எதுவும் இருக்க முடியாது என தெரிவித்தார். இதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
13ம் நாள் திருவிழாவான ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு ஆரம்பர திருவிழா கூட்டு திருப்பலி நடைபெறுகிறது. இதனை தூத்துக்குடி மறை மாவட்ட மேதகு ஆயர் ஸ்டீபன் நடத்துகிறார். இதில் மறை மாவட்ட முதன்மை குரு ரவி பாலன், முதன்மை செயலர் ஜெகதிஷ் முன்னிலை வைக்கின்றனர்.
காலை 9மணிக்கு கோடி அற்புதர் புனித அந்தோணியார் சப்பர பவனி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை திருத்தல தந்தையர்கள், நிதி குழுவினர் ,பணி குழு உறுப்பினர்கள், அருட்சகோதரிகள் மற்றும் பங்கு இறை மக்கள் செய்துள்ளனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக