கோத்தகிரியில் மலைமாவட்ட சிறு விவசாயிகள் நல சங்கம் இலவச மருத்துவ முகாம்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் மலை மாவட்ட சிறு விவசாயிகள் நல சங்கம் நீலகிரி மற்றும் டாக்டர் G. சிவக்குமார் பொதுநல மறுத்துவர் டாக்டர். அனுஶ்ரீ ஆகியோர் இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் ஆனது இன்று (16.2.2025 ஞாயிறு) காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை கோத்தகிரி டானிங்டன் சாலையில் இந்தியன் வங்கி அருகே டீ கவுன்டி எதிரே உள்ள சிவக்குமார் கிளினிக் புதிய கிளை வினாயக் மெடிக்கல்ஸ் வளாகத்தில் நடைபெறுகிறது. இம்முகாமில் அனைத்து வகையான பரிசோதனைகளும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டு மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படும். ஆகவே பொதுமக்கள் இலவச மருத்துவ முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு நீலகிரி மலை மாவட்ட சிறு விவசாயிகள் நல சங்கத்தின் தலைவர் தும்பூர் திரு. ஐ. போஜன் அவர்களும் , நிர்வாகிகளும் , மற்றும் உறுப்பினர்களும் அழைப்பு விடுத்துள்ளனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக