திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 7 பிப்ரவரி, 2025

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தக்கார் ரா. அருள் முருகன் தலைமையில் நாளை வரை நடக்கிறது. 

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாக விளங்குவது திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆகும். இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். 

அவ்வாறு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமியை தரிசனம் செய்து செல்கின்றனர். கோவிலில் உள்ள உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் மாதம்தோறும் திறந்து எண்ணப்பட்டு வருகிறது. அதன்படி ஜனவரி மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இன்று தொடங்கியது. 

கோவில் தக்கார் ரா.அருள் முருகன் தலைமையில், இணை ஆணையாளர் ஞானசேகரன் முன்னிலையில் காணிக்கை எண்ணும் பணி நடந்து வருகிறது. 

இதில் கோவில் பணியாளர்கள் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். பக்தர் ஒருவர் ரூபாய் நோட்டுகளுக்கான பண மாலையை வழங்கி உள்ளார். அந்த பணமும் எண்ணப் படுகிறது. நாளை வரை காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்று பின்னர் மொத்த காணிக்கைகள் விபரம் தெரிவிக்கப்படும். 

இதனிடையே தைப்பூசத்தை ஒட்டி திருச்செந்தூர் கோயிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.

தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad