வாணியம்பாடி அருகே தென்னைமரத்தில் ஏறிய மரம் ஏறும் தொழிலாளி மாரடைப்பால் உயிரிழப்பு. போலீஸார் விசாரணை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2025

வாணியம்பாடி அருகே தென்னைமரத்தில் ஏறிய மரம் ஏறும் தொழிலாளி மாரடைப்பால் உயிரிழப்பு. போலீஸார் விசாரணை.


வாணியம்பாடி அருகே  தென்னைமரத்தில் ஏறிய மரம் ஏறும் தொழிலாளி மாரடைப்பால் உயிரிழப்பு. போலீஸார் விசாரணை.


வாணியம்பாடி,பிப்.22- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வடக்குப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ரவிக்குமார்(41). இவர் தென்னை மரம் ஏறும் கூலி தொழிலாளியாக உள்ளார்.


இந்த நிலையில் இவர் அம்பலூர் அருகே தேங்காய் தோப்பூர் வட்டம் என்ற பகுதியில் சதீஷ் என்பவரின் விவசாய நிலத்திற்கு தேங்காய் வெட்ட  சென்றதாக கூறப்படுகிறது. அப்போது இவர் மரம் ஏறி தேங்காய்களை வெட்டிவிட்டு பின்னர் மரத்தில் இருந்து கீழே இறங்கும் போது மரத்தின் பாதியிலேயே திடீரென மயங்கி அங்கேயே தொங்கிய நிலையில் இருந்ததை கண்ட சக  ஊழியர்கள்  மற்றும் நில உரிமையாளர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவர்  ஏற்கனவே மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.


தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அம்பலூர் போலிசார் அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


சம்பவம் இது குறித்து அம்பலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


வாணியம்பாடி அருகே  மரம் ஏறும் தொழிலாளி மரம்  ஏறி இறங்கிய போது மாரடைப்பால் உயிரிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி செய்தியாளர் R.மஞ்சுநாத். தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad