திருமங்கலம் அருகே முத்தையாபுரம் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சீலைக்காரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் - ஏராளமான பக்தர்கள் தரிசனம் .
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பொன்னமங்கலம் முத்தையாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சீலைக்காரி அம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது .
இக்கோயிலில் அக்கினி வீரபத்திரன் சுவாமிக்கும், ஸ்ரீ நொண்டி கருப்பசாமிக்கும், ஸ்ரீ மந்தையம்மன் சுவாமிகளுக்கும் விசேஷ பூஜைகள், அபிஷேகம் அலங்காரங்கள் நடத்திய பின்பு , ஸ்ரீ சீலைக்காரி அம்மன் கோவில் மேல் உள்ள விமானத்திற்கு , வேத விற்பனர்கள் கோவில் முன்பு நடத்திய யாகசாலையில் கும்பாபிஷேகத்திற்கான தீர்த்தத்தை கலசத்தில் பூஜித்த பின்பு, கோவில் மேல் உள்ள கலசத்துக்கு திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் கணபதி பட்டர்கலசத்திற்கு தலைமையில் மகா சம்ப்ரோஜனம் நடைபெற்றது .
இதனை தொடர்ந்து கலசத் தீர்த்தத்தை கிராம மக்களுக்கு தெளிக்கப்பட்டன. இதில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர். விழாவின் முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக