தஞ்சையில் பொதுத்தேர்வில் நல்ல மார்க்க பெற வேண்டி மகா சரஸ்வதி ஹோம பூஜை: திரளான மாணவ, மாணவிகள் பங்கேற்பு
தஞ்சாவூர் மாவட்டம்:மருத்துவக் கல்லூரி வல்லம் சாலையில் உள்ள சரபோஜி நகரின் பூர்விகமாய் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தில் மகா சரஸ்வதி சன்னதி தனியாக அமைந்துள்ளது.
மஹா சரஸ்வதிக்கு பிப்ரவரி மாதத்தில் இங்கு ஒவ்வொரு ஆண்டும், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுவும் மாணவ, மாணவியர் நல்ல மதிப்பெண் பெற்று, உயர் கல்வி பெற வேண்டி, சிறப்பு பூஜை நடப்பது வழக்கம்.
இந்தாண்டு, 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்று, 108 குங்கும அர்ச்சனை செய்து, சரஸ்வதி தேவியை நேற்று வழிபட்டனர். விஜய விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, மாணவ, மாணவியர் கையில் ரக்சை கயிறு கட்டப்பட்டது. மேலும், சரஸ்வதி தேவிக்கு தேன் அபிஷேகம் செய்து, அது மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டது. எழுதும் பொருட்கள் அடங்கிய பெட்டி,சரஸ்வதி புகைப்படம், மற்றும் அர்ச்சனை செய்யப்பட்ட குங்குமத்தை, மாணவ, மாணவியர் பிரசாதமாக வீடுகளுக்கு எடுத்து சென்றனர். ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகத்தினர் மற்றும் சிறப்பு அர்ச்சர்களும் செய்திருந்தனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக